சாவின் விளிம்பிற்கே சென்ற ரோபோ சங்கர்!

தனியார் தொலைக்காட்சியில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக பயணத்தை ஆரம்பித்த ரோபோ சங்கர் பிற்காலத்தில் வெள்ளித்திரையில் பிரவேசித்து தனக்கான ஒரு இடத்தை பிடித்தார்.

தமிழ் திரையுலகில் தீபாவளி, வாயை மூடி பேசவும், மாரி, புலி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் உடல் எடைக் குறைந்த அவருடைய புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து ரோபோ சங்கர் குறித்து பல வதந்திகள் பரவி வந்தன.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரோபோ சங்கர் உடல் எடை குறைந்தது குறித்து விளக்கமளித்துள்ளார்.

அதில் ‘என் உடம்பை நான் குறைத்ததற்கு காரணம் சினிமாவிற்காக தான். அதுமட்டுமல்லாமல் எனக்கு இடையில் மஞ்சள் காமாலை நோய் வந்துவிட்டது. ஐந்து மாதங்கள் படுத்த படுக்கையில் இருந்தேன் சாவின் விளிம்பிற்கே சென்று விட்டேன்.

அதற்கு காரணம் என்னிடம் இருந்த சில கெட்ட பழக்கங்கள். நான் அந்த பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டேன். தற்போது உங்களுக்கு நான் பெரிய உதாரணமாக இருக்கிறேன். ஒரு கட்டத்தில் தற்கொலை செய்யும் நிலைக்கு சென்றுவிட்டேன்.

கடந்த ஜனவரி மாதம் எனக்கு வாழ்க்கையை வெறுத்து அந்த பழக்க வழக்கம் இல்லாமல் இருக்க முடியாத நிலையில் இருந்தேன். நடு இரவில் பைத்தியம் போன்று வீட்டில் திரிந்தேன்.

அந்த நேரம் மருத்துவர்களை சந்தித்ததன் மூலம் என் உடம்பில் இருந்த மஞ்சள் காமாலை மற்றும் கெட்ட பழக்கங்களால் எந்த பகுதிகள் எல்லாம் சேதம் ஆகியுள்ளன என்பதை எல்லாம் பார்த்து மருத்துவரின் ஆலோசனையை கேட்டு எல்லா பழக்கத்தையும் விட்டேன்” எனத் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த கருத்து தற்போது வைரலாக பரவி வருகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version