சிறிய நாய்க்குட்டிகளிடையே கண்டறியப்படாத தீவிர சுவாச நோய் பரவி வருவதாகவும் இந்த சுவாச நோய்க்கு இதுவரை வெற்றிகரமான சிகிச்சை எதுவும் இல்லை எனவும் கால்நடை மருத்துவர் உபுல் சாகரதிலக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, 8 மாதங்களுக்கு கீழ் உள்ள செல்லப்பிராணிகளை பாதுகாப்பான முறைகளைப் பின்பற்றி பராமரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மூச்சு திணறல், வேகமாக சுவாசித்தல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு, பற்கள் வெளிர்மையாதல், பசியின்மை, சோம்பல்,
போன்ற பல நோய் அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கலப்பின நாய் குட்டிகள் மத்தியில் இது வேகமாக பரவி வருவதாகவும், தற்போது மத்திய மாகாணத்தில் கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய பிரதேசங்களில் அதிகளவில் பரவி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கம்பளை, நாவலப்பிட்டி, கினிகத்தேன மற்றும் ஹட்டன் பிரதேசங்களில் 80 வீதமான நாய்க்குட்டிகள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
எனினும், இந்நோய் வராமல் தடுக்க, யோகட், பசும்பால் உள்ளிட்ட குளிர்ச்சியான உணவுகளை கொடுப்பதை தவிர்க்குமாறும், நான்கைந்து மாதங்களுக்கு குளிப்பாட்டுவதை தவிர்க்குமாறும், அவர் அறிவுறுத்தியுள்ளார்.