தற்போதுள்ள பொருளாதார நிலைமைகளில் வாகன இறக்குமதியை அனுமதிக்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிலைமையை கவனமாக ஆராய்ந்த பிறகே வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் கொள்வனவுகளுக்காக சுமார் 80 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை கூட அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த தருணத்தில் வாகனங்களை இறக்குமதிய செய்ய அனுமதி வழங்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.