நாட்டின் சில புகுதிகளில் இடியுடன் கூடிய மழைபெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடமத்திய மாகாணத்திலும் புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.