கிரீஸ் படகு விபத்தில் 300 பாகிஸ்தானியர்கள் உயிரிழப்பு!

கிரீஸ் கடற்பரப்பில் மூழ்கி விபத்துக்குள்ளான படகில் 300இற்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து ருவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள, பாகிஸ்தானின் செனட்டின் தலைவர் முஹம்மது சாதிக் சஞ்சரானி இந்த தகவலை வெளியிட்டுள்ளதுடன், எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உங்களுடன் உள்ளன, பிரிந்த ஆன்மாக்கள் நித்திய அமைதியைக் காண நாங்கள் பிரார்த்திக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்த அழிவுகரமான சம்பவம், சட்டவிரோத மனித கடத்தலின் அருவருப்பான செயலைக் கண்டிக்க வேண்டிய அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாகிஸ்தானின் இறப்பு எண்ணிக்கையை கிரேக்க அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இதேவேளை பாகிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக் காரணமாக புகலிடம் தேடி பலர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version