கொழும்பின் முக்கிய பகுதியில் பேருந்து சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

கொழும்பின் முக்கிய வழித்தடங்களில் தனியார் பேருந்து சேவையாளர்கள் இன்று (19.06) பணிபுறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதன்படி கொட்டாவை – பொரளை (174) மற்றும் கொட்டாவ – கல்கிசை (225) வழித்தடங்களில் குறித்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விரு வழித்தடங்களிலும், 10 சொகுசு பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சொகுசு பேருந்துகள்  உரிய தனியார் பஸ் சங்கங்களுக்கு அறிவிக்காமல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Social Share

Leave a Reply