வவுனியாவில் 33வது தியாகிகள் தினம் அனுஸ்டிப்பு!

ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னனியின் செயலாளர் பத்மநாபா மற்றும் போராளிகளின் 33வது தியாகிகள் தினம் வவுனியாவில் இன்று (19.06) காலை அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது மணிக்கூட்டுகோபுர சந்தியில் அமைந்துள்ள பத்மநாபாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தேக்கவைத்தையில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ்பிரேமசந்திரன், சிவசக்தி ஆனந்தன், கட்சியின் முக்கியஸ்தர்கள், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Social Share

Leave a Reply