வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மதுபானக் கடைகள் எதிர்வரும் ஜூலை 04ம் திகதி வரை மூடப்படும் என மதுவரைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், ஆலய திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்கள் எவரும் போதைப்பொருள்களை ஆலயத்திற்குள் கொண்டு செல்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், குறித்த காலப்பகுதியில் கடமைகளை மேற்கொள்வதற்காக ஊவா மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று சுற்றுவட்டார பகுதிகளில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.