ஆசிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!

புவி வெப்பமடைதல் காரணமாக ஆசியாவின் இந்து குஷ், இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் நூற்றாண்டின் இறுதியில் 75 வீதம் வரை உருகும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்மூலம் குறித்த பகுதியில் வாழும் 240 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அறிவுறுத்தியுள்ளனர்.

சீரற்ற காலநிலை, காரணமாக எவரெஸ்ட் சிகரம், இமயமலை ஆகியவற்றில் பனி இழப்பு வேகமாக அதிகரித்து வருவதாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது.

2010 களில், பனிப்பாறைகள் முந்தைய தசாப்தத்தில் இருந்ததை விட 65 சதவீதம் வேகமாக உருகியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version