Chairman Trophy – கால்பந்தாட்ட நேர அட்டவணை

வி மீடியா ஊடக அனுசரணையோடு வவுனியவில் நடைபெறவுள்ள செயர்மன் கிண்ண கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்ட போட்டிகள் நாளை மறுதினம் திங்கட்கிழமை மாலை 4.30 இற்கு வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த தொடருக்கான அணிகள் யார் யாரோடு விளையாடுவது என்ற போட்டி ஒழுங்குபடுத்தல் நேற்று(15/10) நடைபெற்றது. போட்டி தொடர் ஏற்பாட்டு குழுவோடு விளையாட்டு உத்தியோகத்தர்கள், வவுனியா மற்றும் வட மாகாண கிரிக்கெட் சங்கங்களின் தலைவர் ரதீபன், அணிகளது தலைவர்கள், விளையாட்டு கழக உறுப்பினர்களது பங்குபற்றதலோடு ஒழுங்குபடுத்தல் நடைபெற்றது.

அதன் அடிப்படையில் கால்பந்தாட்ட போட்டி தொடர் லீக் முறையில் நடைபெறவுள்ளது. இரண்டு குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலுமுள்ள 5 அணிகள் தமுக்குள் போட்டியிட்டு முதலிரு இடங்களை பெறுமணிகள் அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறும்.

போட்டிகள் யாவும் வவுனியா நகரசபை மைதானத்தில் மின்னொளியில் நடைபெறவுள்ளன.

கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணைகள் ஏற்கனவே வி மீடியா இணையம் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி அட்டவணை மற்றும் நேரங்கள் கீழுள்ள அட்டவணையிலுள்ளன.

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version