சீனாவில் BBQ உணவகத்தில் வெடிப்பு – 31 பேர் பலி!

சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள Ningxia பிராந்தியத்தின் தலைநகரான Yinchuan இல் அமைந்துள்ள BBQ உணவகத்தில் நேற்று (22.06) இரவு 8.40 மணியளவில் சமையல் எரிவாயு வெடித்ததில் 31 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தீக்காயங்கள் மற்றும் இடிபாடுகளால் காயங்களுக்குள்ளான 7 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dragon படகு திருவிழா எனப்படும் பந்தய படகுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தினமான நேற்றைய தினம், அதிக மக்கள் ஒன்று கூடும், பிரபல மற்றும் சன நெரிசல் மிக்க நகர வீதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க அந்நாட்டு அரசாங்கம் முனைப்புடன் செயற்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Social Share

Leave a Reply