நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் (CID) முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்ட கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் சமூக ஊடகங்களில் அறிக்கை வெளியிட்டதன் மூலம் நீதிமன்றத்தை அமைச்சர் டயனா கமகே அவமதித்துள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் தெரிவித்துள்ளார்.
தனக்கெதிரான வழக்கில் தீர்ப்பை அறிவிப்பதற்கு முன்னர் முறைப்பாட்டாளர் தீர்ப்பை விலைக்கு வாங்கியதாக டயனா கமகே ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை தெரியவந்துள்ளதையடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.