விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி!

எம்பிலிப்பிட்டிய – வெலிக்கடையாய பகுதியில் இன்று (ஜூன் 24) அதிகாலை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பல துப்பாக்கிச்சூட்டு வன்முறையுடன் தொடர்புடைய 22 வயதுடைய இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்ய நடவடிக்கை எடுத்த நிலையில், அதனை தவிர்ப்பதற்காக இளைஞர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து விசேட அதிரடிப்படையினரும் பதில் தாக்குதல் நடத்திய நிலையில், அதில் இளைஞர் கொல்லப்பட்டதாக தெரியவருகிறது.

உயிரிழந்தவர் முன்னாள் இராணுவ சிப்பாய் எனவும், மினுவாங்கொடை மற்றும் அம்பலாங்கொடை ஆகிய இடங்களில் அண்மையில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் இதன் போது பிரதி பாடசாலை அதிபர் உட்பட மூவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version