கடலுக்குள் உடைந்து கிடக்கும் டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை பார்வையிட, டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் சென்ற 5 பேர் பலியான சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்த விபத்து குறித்து டைட்டானிக் திரைப்படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தமது தனிப்பட்ட கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்திலேயே இந்த விபத்து நடந்திருப்பது தன்னை ஆச்சரியப்படுத்தியுள்ளதாகவும், ஏற்கனவே தாம் அந்த பகுதியில் 33 முறை சென்று வந்து இருப்பதாகவும், அங்கு அவருக்கும் கூட சில பயங்கரமான அனுபவங்கள் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், அந்த பகுதி கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 500 மீட்டர் ஆழம் கொண்டது, அதனால் நீர்மூழ்கி கப்பல் மீது அதிகமான அழுத்தம் இருக்கும் எனவே சிறிய தவறு நடந்தாலும் அது மிகப்பெரும் விபரீதமாக ஆகிவிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டைட்டானிக் கப்பல் மூழ்கிய பகுதியில் இனம்புரியாத அதீதமான ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என தாம் நம்புவதாக டைட்டானிக் திரைப்படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.