கொழும்பில் இருந்து வெளியேற வேண்டாம் – அரசாங்கத்தின் பிரதம கொறடா அறிவிப்பு!

ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று முதல் (26.06) அடுத்த வாரத்திற்குள் கொழும்பில் இருந்து வெளியேற வேண்டாம் என அரசாங்கத்தின் பிரதம கொறடா அறிவித்துள்ளார்.

இதன்படி வெளிநாட்டு பயணங்கள் உள்பட கொழும்பிற்கு வெளியில் மேற்கொள்ளும் பயணங்களையும் தவிர்த்துகொள்ளுமாறு பிரதம கொறடா வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வார நாடாளுமன்ற அமர்வின்போது கடன் மறுசீரமைப்பு முன்மொழிவு உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் விவாதிக்கப்படவுள்ளதால், தொலைப்பேசி அழைப்புகள் மூலம் இந்த அறிவிப்பு தனிப்பட்ட முறையில் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version