சிரியாவின் இட்டிலிப் பிராந்தியத்தில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இட்லிப் பிராந்தியத்திலுள்ள ஜஸ்ர் அல் சுகுர் நகரிலுள்ள சந்தையொன்றில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களில் இரு சிறுவர்கள் உள்ளட 9 பொதுமக்கள் அடங்கியுள்ளதாக யுத்த கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளர்ச்சியார்கள் கடந்த வாரம் மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலடியாவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்துக்கு ஆதரவாக ரஷ்ய படையினர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை இவ்வருடம் சிரியாவில் ஒரே தடவையில் அதிக எண்ணிக்கையானோர் கொல்லப்பட்ட ரஷ்ய தாக்குதல் இதுவாகும் என மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகத்தின் தலைவர் ரமி அப்தேல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.