லிட்ரோவின் விலை மீண்டும் குறையும் சாத்தியம்!

எதிர் வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில், நான்காவது முறையாகவும் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைவடையும் சாத்தியம் உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இறுதியாக 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 452 ரூபாவால் குறைக்கப்பட்டு 3,186 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை மேலும் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply