எஹலியகொடையில் பாரிய விபத்து – ஐவர் கவலைக்கிடம்!

எஹலியகொடையில் இரண்டு பயணிகள் பேருந்துகள் மோதிக்கொண்டதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியில் புஸ்ஸல்லா பயிற்சி நிலையத்திற்கு அருகில் இன்று (26.09) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தனியார் பயணிகள் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அந்த பேருந்தின் மீது மற்றுமொரு சொகுசு பயணிகள் பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால், சொகுசு பேருந்து முன்னோக்கி நகர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வேன் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டைவத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காயமடைந்தவர்களில் சம்பவத்தின் போது வீதியோரம் நடந்து சென்ற பாதசாரிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply