குரங்குகளை ஏற்றுமதி செய்ய மாட்டோம் என உறுதிமொழி!

இலங்கையில் இருந்து சீனாவிற்கு டோக் மக்காக் குரங்குகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க மாட்டோம் என வனஜீவராசிகள் மற்றும் பாதுகாப்பு திணைக்களத்தினால் இன்று (26.06) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று (26.06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, வனஜீவராசிகள் மற்றும் பாதுகாப்பு திணைக்களம் வழங்கிய உறுதிமொழி, தொடர்பில் சட்டமா அதிபரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.

நீதிமன்றத்திற்கு வழங்கிய உறுதிமொழியை பதிவு செய்வதற்காக இந்த வழக்கு அடுத்த ஜூலை 6, 2023 அன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து சீனாவிற்கு டோக் மக்காக் குரங்குகளை ஏற்றுமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இலங்கையின் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம் உட்பட பல விலங்கு ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இது தொடர்பில் மனு தாக்கல் செய்தனர், சீனாவிற்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான எந்தவொரு முடிவையும் ரத்து செய்து உத்தரவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி அமில குமார் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, சட்டத்தரணிகளான பிரசாந்தி மகிந்தரத்ன, திலுமி டி அல்விஸ், லக்மினி வருசேவிதனே மற்றும் ருக்ஷான் சேனாதிர ஆகியோர் முன்னிலையாகினர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version