2016ஆம் ஆண்டு மலேரியாவை ஒழித்த நாடாக அறிவிக்கப்பட்ட இலங்கையில் மீண்டும் மலேரியா பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த வருடத்தில் மட்டும் இதுவரையில் மூன்று வெளிநாட்டவர்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளிலிருந்து 20 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மலேரியா பிரச்சாரம் மற்றும் மலேரியா தொடர்பிலான மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள 24 மணி நேரமும் இயங்கும் 071 – 284 1767 மற்றும் 0117 626626 என்ற இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.