கென்யாவில் கட்டுப்பாட்டை இழந்த ட்ரக் வாகனமொன்று, பாதசாரதிகள் மீது மோதியதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
கெரிச்சோ நகுறு என்ற இரண்டு நகரங்களிற்கு இடையில் உள்ள அதிவேகநெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் சிலர் வாகனங்களிற்கு அடியில் சிக்குண்டிருக்கலாம் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் 30 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடும் மழைகாரணமாக மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.