முலட்டியன பகுதியில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையொன்றின் போது பாதாள உலக குழுக்களின் முக்கிய புள்ளிகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து டி56 ரக துப்பாக்கி மற்றும் வெளிநாட்டுத் துப்பாக்கிகள் உட்பட சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலக குழுக்களின் முன்னாள் தலைவர் மாக்கந்துர மதுஷின் சகாக்கள் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.