மீண்டும் குறைக்கப்படும் எரிவாயுவின் விலை!


லிட்ரோ சமயல் எரிவாயுவின் விலையில் மீண்டும் திருத்தம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் நான்காம் திகதி (செவ்வாய்க்கிழமை) முதல் குறித்த விலை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக 12.5 கிலோகிராம் லிட்ரோ சமயல் எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாவால் குறைக்கப்பட்டது. இதன்படி தற்போது 12.5 கிலோகிராம் நிறையுடைய சமயல் எரிவாயு ஒன்று 3186 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 2.3 கிலோகிராம் நிறையுடைய சமயல் எரிவாயு 1281 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

Social Share

Leave a Reply