லிட்ரோ எரிவாயுவின் விலையை மேலும் குறைக்க தீர்மானம்!

லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் தனது 12.5 கிலோ கிராம் எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை நாளை (04.07) நள்ளிரவு முதல் குறைக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் எடைகொண்ட சிலிண்டரின் விலை 3000 ரூபாவிற்கு உட்பட்ட விலையில் நிர்ணயிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனம், அண்மைய காலமாக மேற்கொள்ளும் நான்காவது விலைகுறைப்பு இதுவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இறுதியாக லிட்ரோ நிறுவனம் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டருக்கு 300 ரூபாய் விலைகுறைப்பை மேற்கொண்டிருந்தது.

Social Share

Leave a Reply