உலக நாடுகளின் பொது விடுமுறை பட்டியல்!

உலக நாடுகளின் பொது விடுமுறைகள் தொடர்பான பட்டியலில் இலங்கை நான்காம் இடத்தில் உள்ளது.

முதல் இடத்தில் வருடத்தில் 35 நாட்கள் பொது விடுமுறையாக கொண்டுள்ள நேபாளம் உள்ளதுடன், மியன்மார் நாட்டில் வருடத்தில் 32 நாட்களும், ஈரான் நாட்டில் வருடத்தில் 26 நாட்களும், இலங்கையில் 25 பொது விடுமுறைகளாகவும் உள்ளது.

மேலும், பங்களாதேஷ் மற்றும் எகிப்தில் வருடத்தில் 22 நாட்களும், கம்போடியா மற்றும் இந்தியாவில் 21 நாட்களும், ஆஜன்டீனா மற்றும் லெபனான் நாடுகளில் 19 நாட்களும், கம்போடியா மற்றும் பிலிப்பைன்சில் 19 நாட்களும் பொது விடுமுறைகளாகவும் உள்ளது.

ஐஸ்லாந்து, இந்தோனேசியா, ஜப்பான், பாகிஸ்தான், கசகஸ்தான், தாய்லாந்து ஆகிய நாடுகளில் 16 நாட்களும், ஆஸ்திரியா, சில்லி, டென்மார்க், நோர்வே, தென் கோரியா, துருக்கி, வெனிசுலா ஆகிய நாடுகளில் 14 நாட்களும், பொது விடுமுறைகளாக உள்ளது. மேலும், பின்லாந்து, போலந்து, ஸ்பெயின் நாடுகளில் 13 நாட்களும், சீனாவில் வருடத்தில் 11 நாட்களும், கனடாவில் 10 – 13 நாட்களும், பிரித்தானியாவில் 8-10 நாட்களும் பொது விடுமுறைகளாக உள்ளது.

Social Share

Leave a Reply