சாமரி அத்தப்பத்து முதலிடத்தில்

சாதனைகளை படைக்கும் சாமரி அத்தப்பத்து. இலங்கை மகளிர் அணியின் எழுச்சி. SriLanak Women Cricket. V Media

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சாமரி அத்தப்பத்து ஒரு நாள் சர்வதேசப் போட்டி தரப்படுத்தலில் முதலிடத்தை பெற்றுள்ளார். சர்வதேசக் கிரிக்கெட் பேரவையினால் இன்று(04.07) வெளியிடப்பட்டுள்ள தரப்படுத்தலில் 758 புள்ளிகளை அவர் பெற்று முதலிடத்தை தனதாக்கினார்.

நேற்று(03.07) நிறைவடைந்த நியூசிலாந்து அணியுடனான தொடரில் இரண்டு சதங்கள் அடங்கலாக 248 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இதன் மூலம் 7 இடங்கள் முன்னோக்கி சென்று முதலிடத்தை கைப்பற்றியுள்ளார்.

இலங்கை அணி நியூசிலாந்து அணியுடன் தொடரை 2-1 என கைப்பற்றி, நியூசிலாந்து அணியுடனான முதல் வெற்றியினையும் தொடர் வெற்றியினையும் பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பாக சனத் ஜெயசூரியா மட்டுமே ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் முதலிடத்தை பெற்றவராவார்.

இந்த தொடரில் சாமரி அத்தப்பத்து 3000 ஓட்டங்களை கடந்த முதலாவது இலங்கை வீராங்கனை என்ற மைற்கல்லை தனதாக்கினார். ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 8 சதங்களையும் அவர் பூர்த்தி செய்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version