சிம்பாவேயின் உலகக்கிண்ண கனவு தளர்ந்தது.

சிம்பாவேயில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண தொடருக்கான தெரிவுகாண் போட்டி தொடரில் இன்று(04.07) சிம்பாவே அணி ஸ்கொட்லாந்து அணியிடம் தோல்வியடைந்து உலகக்கிண்ண வாய்ப்பை இழந்துள்ளது. இதன் மூலம் ஸ்கொட்லாந்து அணி உலகக்கிண்ண தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்ப்பை அதிகரித்ததுள்ளது. நெதர்லாந்து, ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெறுமணிக்கு உலகக்கிண்ணத்துக்கு தகுதி பெறும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் ஸ்கொட்லாந்து அணி தோல்வியடைந்தாலும் ஓட்ட நிகர சராசரி வேகத்தின் அடிப்படையில் தகுதி பெறும் வாய்ப்புகளுள்ளன.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி 50 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 234 ஓட்டங்களை பெற்றது. இதில் மிக்கேல் லீஸ்க் 48 ஓட்டங்களையும், மத்தியூ குரோஸ் 38 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஷோன் வில்லியம்ஸ் 3 விக்கெட்களையும், ரெண்டாய் சட்டாரா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய சிம்பாவே அணி 41.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 203 ஓட்டங்களை பெற்றது. இதில் ரயான் பேர்ல் 83 ஓட்டங்களையும், வெஸ்லி மெதவ் 40 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கிறிஸ் சோல் 3 விக்கெட்களையும், ப்ரண்டன் மக்மலன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

Social Share

Leave a Reply