வவுனியாவில் கோர விபத்தில் சிக்கி இளைஞன் பலி!

வவுனியா ஏ9 வீதி அரசாங்க விதை உற்பத்தி பண்ணைக்கு அண்மித்த பகுதியில் இன்று (05.07) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியா நகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த கனரக வாகனத்தினை முந்திச்செல்ல முற்பட்ட சமயத்தில் எதிர்த்திசையில் வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வானுடன் மோதுண்டு குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

வவுனியா குருமன்காடு பகுதியினை சேர்ந்த 24வயதுடைய சிவகுமார் ருபீன்ஸ்ராஜ் என்ற இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

அவருடைய சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் மூன்று வாகனங்களும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Social Share

Leave a Reply