இலங்கை மத்திய வங்கி தனது கொள்கை வட்டி விகிதங்களை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி மத்திய வங்கியின் நிலையான கடன் வசதி வீதத்தை 12 வீதமாகவும், நிலையான வைப்பு வசதி வீதத்தை 11 வீதமாகவும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மே 31 அன்று இலங்கை மத்திய வங்கியின் நாணய வாரியம் கொள்கை வட்டி விகிதங்களை சாதனையாக குறைக்க முடிவு செய்திருந்தது.
இதற்கிடையே கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார தாக்கம் வட்டி விகிதங்கள் உயர்வதற்கு காரணமாக அமைந்தன.
இருப்பினும் தற்போது பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கணிசமான முன்னேற்றங்களின் பலன் மக்களுக்கும் கிடைக்கும் வகையில் மத்திய வங்கி மேற்படி நடவடிக்கை எடுத்துள்ளது.