ஒரே குடையின் கீழ் அனைத்து ரோபோக்களும் பங்கேற்கும் உலக உச்சிமாநாடு!

ரோபோக்கள் பங்கேற்கும் உலக உச்சி மாநாடு தற்போது ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது.

சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த உச்சிமாநாட்டில், ரோபோக்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் இணைந்துக்கொண்டுள்ளனர்.

இந்த மாநாடு  உலகளாவிய மாநாடுகளில் ரோபாட்டிக்ஸ் மற்றும் ஏஐயின் ஒருங்கிணைப்பில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் பத்திரிக்கையாளர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு ரோபோக்கள் பதிலளிக்கும்.  எட்டு சமூக ரோபோக்கள் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட சிறப்பு ரோபோக்கள் உட்பட ஐந்தாயிரம் பங்கேற்பாளர்கள் இதில் கலந்துகொள்கின்றனர்.

வரலாற்றி முதல் முறையாக அனைத்து ரோபோக்களும்  ஒரே கூரையின் கீழ் ஒன்றாக பங்கேற்கின்றன.

Social Share

Leave a Reply