புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் கடந்த ஜுன் மாதம் மாத்திரம் 476 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக சென்றுள்ளனர்.
அவர்கள் மூலம் கடந்த மாதம் கிடைக்கப்பெற்ற அந்நிய செலாவணி 476 மில்லியன் டொலர்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது கடந்த 2022 ஜுன் மாதத்தில் 274 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட நிலையில், இவ்வருடம் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டுக்கு கிடைக்கபெற்ற நேரடி வெளிநாட்டு அந்நியச் செலாவணி 2,823 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.