தான் காதலித்த பெண்ணின் தகப்பனை வெட்டிக்கொன்ற 25 வயதான இளைஞன் இன்று(08.07) கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, அவிசாவளை பதுவத்தை பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தின் சந்தேகத்தின் பேரில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை தாக்கும் போது அதனை தடுக்க முற்பட்ட பெண்ணின் தகப்பன் வெட்டப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இடம்பெற்ற சம்பவத்தில் தகப்பனும் மகளும் படு காயங்களுக்கு உட்பட்டு அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் படு காயமடைந்த 60 வயதான தகப்பன் சிகிச்சை பலனின்றி கொல்லப்பட்டுள்ளார்.