நிர்வாணக் கோலத்தில் பிக்கு மற்றும் யுவதிகளை தாக்கியவர்களுக்கு விளக்கமறியல்!

நவகமுவ,  பொமிரிய ராஸ்ஸபான பிரதேசத்திலுள்ள விஹாரை ஒன்றின் அறையில் பௌத்த தேரருடன் காணப்பட்டதாகக் கூறப்படும் யுவதி மற்றும் அவரது தாய் ஆகியோரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொதுபாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் உத்தரவுக்கு அமைய கைது செய்யப்பட்ட எட்டு பேரும் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது நீதவான் மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி குறித்த 08 பேரையும் வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முறைப்பாடு செய்தவருக்கு எதிராக முறைப்பாடு செய்ய தமது தரப்பு விரும்புவதாக நீதிவானிடம் கேட்டனர்.

குறித்த முறைப்பாடுகளை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

Social Share

Leave a Reply