ஜனாதிபதி மாளிகையில் வைக்கப்பட்டிருந்த பதக்கங்களை கண்டுப்பிடிக்க உதவுமாறு கோரிக்கை!

ஜனாதிபதி மாளிகையில் இருந்து காணாமல் போன உத்தியோகபூர்வ பதக்கங்களை கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஆளுனர்கள் மற்றும் ஜனாதிபதிகளின் உத்தியோகப்பூர்வ பதக்கங்கள் காணாமல்போயுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த பதக்கங்கள் யாரிடமாவது இருந்தால் அவற்றை ஜுலை 31 ஆம் திகதிக்கு முன்னர்   ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

Social Share

Leave a Reply