இந்நாட்டில் அருகிவரும் அவதானத்துக்குட்பட்டுள்ள விலங்குகள் தொடர்பான தகவல்களை தொடர்ச்சியாக அவதானிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், இதற்கமைய, இது தொடர்பில் விரிவான தேசியக் கணக்கெடுப்பொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் எனபதையும் வலியுறுத்தினார்.
தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தொடர்பில் விசாரணை செய்வதற்கு கடந்த 5 ஆந் திகதி கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழுவில், குழுவின் அனுமதிக்கமைய எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்ற போதே மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.