பொலன்னறுவை – மன்னம்பிட்டி, கொத்தலிய பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 10 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததுடன் 40 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக நம்பப்படுகிறது.. பொலன்னறுவை, கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற தனியார் பேருந்தொன்று மன்னம்பிட்டி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த ஆற்றில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேருந்தில் 70 இற்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். இந்த அனர்த்தம் காரணமாக பலர் நீரில் மூழ்கியிருக்கலம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட பலர் காயமடைந்த நிலையில் பொலன்னறுவை மற்றும் கதுருவெல வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக அப்பகுதியில் சற்று பதற்றமான சூழல் நிலவுகிறது. மக்கள் மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.