சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனத்தின் (FIFA) பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடல்!

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் திரு.ரொஷான் ரணசிங்க அவர்கள் இன்று (10.07) சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பிரதிநிதிகளுடன் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்த கலந்துரையாடலில் சர்வதேச தடையுடன் இலங்கையில் உதைபந்தாட்டத்தின் தற்போதைய நிலை குறித்தும், உதைபந்தாட்ட மீதான சர்வதேச தடையை நீக்குவதற்கான பல விடயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு சாதகமான அணுகுமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் அமைச்சரின் கவனம் செலுத்தப்பட்டது. தடை விதிக்கப்பட்டுள்ளமையினால் உதைபந்தாட்ட வீரர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் மற்றும் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண தெரிவுப் போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பு கிடைபதில் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பிலும் அமைச்சர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

இரு தரப்பினரின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தடையை நீக்கி இலங்கை உதைபந்தாட்ட அணிக்கு உலகக் கிண்ணப் பயிற்சிப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்குத் தேவையான பின்னணியை தயார் செய்யுமாறு அமைச்சர் சர்வதேச உதைபந்தாட்டப் பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டதுடன் குறித்த கோரிக்கையை பரிசீலிக்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனத்தின் (FIFA) பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடல்!

தடையை நீக்கி இலங்கை உதைபந்தாட்ட அணியை சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு சாதகமான பலன் கிடைக்கும் என எதிர்பார்த்து, கலந்துரையாடப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தவும் உடன்படிக்கைகளின்படி செயற்படவும் விரைவான பொறிமுறையொன்று தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Participants in this discussion: Mr.Kenny Jean Marie (Chief Member Association Officer FIFA), Mr.Wahid Kardany (Member Association AFC), Ms. Sarah Solemale (Senior Manager – Member Associations Governance FIFA), Mr.K.Mahesan (Secretary – Ministry of Sports & Youth Affairs, Mr. Gamini Wikramapala (DG -Planning – Ministry of Sports & Youth Affairs, Mr. Sumathi Dharmawardhena (PC – Additional Solicitor General, Attorney General’s Departments), Mr.Rajika Aluwihare (Attorney General’s Departments)

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version