சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய வேண்டாம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கைகள் இறுக்கமாக்கப்பட்டுள்ள நிலையில், உயிருக்கு அச்சுறுத்தலான படகு பயணங்கள் மூலம் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவோர் அவர்களது நாட்டுக்கே திருப்பியனுப்பப்படுவதுடன் அவர்களிடம் தண்டப்பணமும் அறவிடப்படும் என அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அரசாங்கங்கள் அறிவித்துள்ளன.

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்வோரின் எண்ணிக்கை கடந்த காலங்களில் சடுதியாக அதிகரித்ததையடுத்து, அதனைத் தடுப்பதற்குரிய கூட்டிணைந்த நடவடிக்கைகளை இலங்கையும் அவுஸ்திரேலியாவும் இணைந்து முன்னெடுத்துவருகின்றன என அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆட்கடத்தலை முறியடிப்பதற்கு இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மிகமுக்கியமானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் சமூகத்துக்கு நன்மை செய்யும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும், மாறாக பின்தங்கிய நிலையிலுள்ள மக்களைப் பயன்படுத்தி பெருமளவு பணம் உழைத்துக்கொள்வதை பிரதான நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ‘ஸீரோ சான்ஸ்’ என்ற கொள்கையின் பிரகாரம், படகுகள் மூலம் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவோர் அவர்களது நாட்டுக்கே திருப்பியனுப்பப்படுவதுடன் அவர்களிடம் தண்டப்பணமும அறவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடவேண்டாம் என்று பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version