இலங்கையில் இருந்து தங்கத்தை கடத்திச் செல்ல முயற்சித்த ஐந்து சந்தேக நபர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 8.65 கிலோ தங்கத்துடன் BIA இன் புறப்படும் முனையத்தில் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய இலங்கை சுங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் தங்கத்தை ஜெல் மற்றும் துகள் வடிவில் கடத்த முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பதுக்கி கொண்டு செல்ல முயன்ற பொதியின் பெறுமதி சுமார் 164 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.