இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்மாதம் 20 ஆம் 21 ஆம் திகதிகளில் இந்தியா புது டெல்லிக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது இலங்கை ஜனாதிபதிக்கு மிகச் சிறந்த வரவேற்பு வழங்கப்படுமென இலங்கை வருகை தந்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.
அனைவராலும் அறியப்பட்ட சிறந்த தலைவர் அவர். உறவுமுறைகளுக்கு முக்கியத்தவும் வழங்கும் தலைவர். கடந்த காலங்களில் மோசமான நிலைமைகள் காணப்பட்ட வேளையில் இந்தியாவுடன் நெருக்கமாக செயற்பட்டு நாட்டை மீட்டுள்ளார். 14-16 மாதங்கள் சிக்கலான நிலைகள் காணப்பட்ட வேளையில் இந்தியாவுடன் உறைவை பேணி சிறப்பாக செயற்பட்டுள்ளார். அதன் காரணமாக அவருக்கு சிறந்த வரவேற்பு இந்தியாவில் காத்திருப்பதாக வெளியுறவு செயலாளர் கருத்து கூறியுள்ளார்.
இலங்கை ஜனாதிபதியின் இந்தியா பயணத்துக்கான ஏற்பாடுகள் தொடர்பிலும், இரு நாட்டு உறவுகள் தொடர்பிலும், இரு நாட்டு உறவுகளின் நேர்தன்மையை வெளிக்காட்டவும் இலங்கை ஜனாதிபதியுடனும், வெளிநாட்டு அமைச்சுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளதாக வினய் குவாத்ரா கூறியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளிநாட்டு அமைச்சு போன்றவற்றில் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துவிட்டு நேற்று(11.07) இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தனது இலங்கை விஜயம் தொடர்பில் வெளியுறவு செயலாளர் விளக்கமளித்தார்.
இலங்கை ஜனாதிபதியின் இந்தியாவுக்கான பயணத்தின் போது நடைபெறவுள்ள விடயங்கள், முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள், இரு நாட்டு உறவுகளை மேம்படுத்தும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக இந்திய வெளியுறவு செயலாளர் ஊடக சந்திப்பில் தனது பயணம் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.