மொரகஹஹேன பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மொரகஹஹேன தலகல பகுதியில் உள்ள காணி ஒன்றில், நண்பர்கள் குழுவினர் கூடி மது விருந்து நடத்தியுள்ளனர். இதன்போதே குறித்த கொலை சம்பவம் நடந்துள்ளது.
சம்பவத்தில் நிரோஷன் சந்திமா என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முன்னாள் விமானப்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன.
ஏல நிலத்தின் அலுவலகத்திற்கு அருகில் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், கொலை செய்யப்பட்ட நபரின் தலையில் தலையணை வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த இடத்துக்குப் பதிலாக வேறு இடத்தில் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனப் பெரிதும் சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் ஏல நிலத்தின் 07 ஊழியர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.