விவசாயிகள் பொருளாதார நிலையங்களுக்கு கொண்டு வரும் காய்கறிகள் மற்றும் பழங்களை கொள்வனவு செய்யாத வர்த்தகர்களின் வரி உரிமத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்க மறுக்கும் கடைக்காரர்கள், இடைத்தரகர்கள் மூலம் கொள்முதல் செய்வதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விவசாய திணைக்களம் மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் மூலம் விவசாயிகளையும் நுகர்வோரையும் சுரண்டும் திட்டம் பொருளாதார மையங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் பொருளாதார நிலையங்களின் முகாமையாளர்களையும், பழங்கள் மற்றும் மரக்கறிகளை விநியோகிக்கும் விவசாயிகளையும் பொருளாதார நிலையங்களுக்கு அழைத்து விரிவான கலந்துரையாடலை மேற்கொள்ள விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நடவடிக்கை எடுத்துள்ளார். .
இதன்படி, விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்காத விற்பனை நிலையங்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள உரிமங்களை ரத்து செய்து மற்றவர்களுக்கு மாற்றுவதாக அமைச்சர் அறிவித்துள்ளார்