மர்மமான முறையில் மற்றுமொரு நபர் உயிரிழப்பு!

காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்ட மற்றுமொரு நோயாளியும் சந்தேகத்திற்கிடமான முறையில் நேற்று (13.07) உயிரிழந்துள்ளார்.

மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் உதவி மேலாளராக பணியாற்றிய ஒருவர், காய்ச்சல் காரணமாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது  நோயாளிக்கு பொருத்தப்பட்டிருந்த கேனுலாவில் (டியூப்) இருந்து பாக்டீரியா தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் காய்ச்சல் காரணமாக காலி பிரதேசத்தில் உள்ள அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் அவருக்கு  பொருத்தப்பட்டிருந்த கேனுலாவில் கிருமி தொற்று ஏற்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இருதய நோயாளர் என்பதால் வேறு வைத்தியசாலைக்கு மாற்ற வைத்தியர்கள் முயற்சித்துள்ளனர்.

இருப்பினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கானுலாவில் இருந்த  பாக்டீரியா தொற்றுதான்  மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.

Social Share

Leave a Reply