திருகோணமலையில் நீர்வழி மற்றும் நீர்வள முகாமைத்துவ திட்டம் ஆரம்பம்!

உலக வங்கியின் உதவியுடன் மாகாண நீர்ப்பாசனத்திணைக்களம் மற்றும் மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அனுசரணையில் ஒருங்கிணைந்த நீர்வழி மற்றும் நீர்வள முகாமைத்துவத் திட்டத்தின் (IWWMPA) திருகோணமலை மாவட்ட தொடக்க விழாவானது நேற்று (13.07) நடைபெற்றது.

இந்த திட்டத்திற்காக உலக வங்கியானது நிதி அனுசரணை வழங்கியதுடன் 3,974000.00 ரூபாய் ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள குறித்த திட்டமானது, கந்தளாய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பண்டாரநாயக்க வீதி, நவ ராஜஎல கால்வாயில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கபில நுவன் அத்துகோரல பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என். ஜயவிக்ரம, மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர் ஏ.கே. அப்துல் ஜப்பார், திணைக்கள தலைவர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள், சக உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply