வவுனியால் 34ஆவது வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பு!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 34வது வீரமக்கள் தினம் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் நேற்றையதினம் (13.07) இடம்பெற்றது.

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான ஜி. ரி. லிங்கநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கழகத்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர், மற்றும் நகரசபை, பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியால் 34ஆவது வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பு!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version