இந்தியா அணி அதிரடி வெற்றி

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி மூன்றாம் நாளில் நிறைவடைந்துள்ளது. இந்தியா அணி இந்தப் போட்டியில் இன்னிங்சிஸ் மற்றும் 141 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாம் இன்னிங்சில் 130 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. அலிக் அன்ஸ் 28 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். ரவிச்சந்திரன் அஷ்வின் 7 விக்கெட்களை கைப்பற்றிக் கொண்டார். ரவீந்தர் ஜடேஜா 2 விக்கெட்ளை கைப்பற்றினார்.

இந்தியா அணி தமது முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 421 ஓட்டங்களை பெற்று துடுப்பாட்டத்தை இடை நிறுத்தியது. தனது அறிமுக போட்டியில் சதமடித்த ஜஷாஸ்வி ஜய்ஸ்வால் 17 ஓட்டங்களை பெற்றார். ரோஹித் ஷர்மா 103 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். இருவரும் ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாக 229 ஓட்டங்களை பகிர்ந்தனர். விராத் கோலி 76 ஓட்டங்களை பெற்றார்.

முன்னதாக தமது முதல் இன்னிங்சில் துடிப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 150 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. துடுப்பாட்டத்தில் அறிமுக வீரர் அலிக் ஆதன்ஸ் 47 ஓட்டங்களை பெற்றார். கிரைக் ப்ராத்வைட் 20 ஓட்டங்கள். பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஷ்வின் தனது 35 ஆவது ஐந்து விக்கெட் பெறுதியினை பெற்றுக் கொண்டார். ரவீந்தர் ஜடேஜா 3 விக்கெட்களையும், மொஹமட் சிராஜ், ஷர்டூல் தாகூர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

Social Share

Leave a Reply