இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி தலைவராக சங்கரலிங்கம் ரூபதர்ஷனும், பொதுச் செயலாளராக சுப்பிரமணியம் ரமேஷ்குமாரும் இன்று (16.07) நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் மற்றும் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் ஆகியோரின் பங்குபற்றலோடு இவர்களுக்கான நியமன கடிதங்களை அமைச்சர் ஜீவன் தொண்டமான் வழங்கி வைத்துள்ளார்.
அத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணியை சிறப்பாக வழிநடத்திச் செல்ல அவர் தனது வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.