இலங்கையின் கடன் மறுசீரமைப்பை விரைவில் தீர்மானிக்க முடியும் என அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செய்வதால், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தை சரியாக மறுபரிசீலனை செய்ய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கியாளர்களின் கூட்டத்திற்கு முன்னதாக இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.