வங்கிகள் வைப்புத்தொகைக்கு காப்புறுதியை உருவாக்குவது கட்டாயம் – இராஜாங்க அமைச்சர்!

ஒவ்வொரு வங்கியும் வைப்புத்தொகைக்கு காப்புறுதியை உருவாக்குவது கட்டாயம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வங்கி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தில் இது தொடர்பான சட்ட ஏற்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வங்கி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இந்த வாரம் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இதற்கிடையில் அமைச்சர் மேற்படி தெரிவித்துள்ளார்.

‘ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு வங்கி சிறப்பு ஏற்பாடுகள் சட்டம் மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்த அவர், வழக்கத்தை விட வலுவான சட்ட கட்டமைப்பை உருவாக்குவது மிகவும் முக்கியமானது எனவும் சுட்டிக்காட்டினார்.

எங்களிடம் 75 மில்லியன் வங்கி வைப்பாளர்கள் உள்ளனர். அவர்களின் கண்குகளில் 14 டிரில்லியன் ரூபாய் உள்ளது. இது பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர் தற்போது வைப்புகளின் பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

நிதி நிறுவனங்கள் சிக்கலில் இருக்கும்போது வைப்பாளர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் சூழ்நிலைகளை நாம் பார்த்தோம் எனவும் புதிய சட்டம் என்பது ஒரு நிதி நிறுவனத்தின் ஸ்திரத்தன்மை குறையும் பட்சத்தில் மத்திய வங்கி முன்பை விட நேரடியாக தலையிட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply