சாணக்கியன் மீது தாக்குதல் முயற்சி

மட்டக்களப்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கலந்து கொண்டிருந்த சட்டவிரோத பேரூந்து சேவைகளுக்கு எதிரான போராட்டத்தின் பின்னர் ஊடங்களுக்கு கருத்து வெளியிடும் போது தன் மீது அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்களினால் தாக்குதல் முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற சாணக்கியன் தெரிய்வத்துள்ளார்.

அண்மையில் மன்னம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தின் போது 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவும் மட்டக்களப்பில் இயங்கி வரும் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகளின் பிரச்சனை தொடர்பாகவும் இன்றைய தினம்(17.07) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது வீதி போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி 10 பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் இதன் பின் அரசியல் பின்னணி இருப்பதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. குறித்த விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு தான்ன் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கும் போது உள்நுழைந்த இரு அரச சார் அமைச்சரின் ஆட்கள் தன்னை தாக்குவதற்கு முற்பட்டதன் காரணமாக போராட்டக்காரர்களாளும் குழுமியிருந்த மக்களாலும் வெளியேற்றப்பட்டுள்ளார்கள் என சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது சட்ட விரோதமான முறையில் இயங்கி வரும் பேருந்துகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகாரியின் அசமந்த செயற்பாட்டின் காரணமாக 11 உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு நடவடிக்கை எடுக்க கோரியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை முன்வைத்தாக சாணக்கியன் ஊடக சந்திப்பில் கூறியுள்ளார்.

“இன்றைய தினம் நான் பொலிசாரின் உதவியுடன் பேரூந்துகளின் அனுமதிப்பத்திரங்களையும் அதிரடியாக சோதனை செய்தேன் அதிலும் பல அனுமதி இன்றி இயங்கும் பேருந்துகள் அடையாளம் காணப்பட்டது.
ஒழுங்கான முறையில் விதிப்போக்குவரத்து அனுமதி பத்திரங்கள் இன்றி போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்ற காரணத்தினாலும் போட்டித் தன்மையினாலும் இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது” என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கருத்து வெளியிட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version